திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் 10-ஆம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித மலத்தை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.

பள்ளி மாணவர்களே இந்த செயலில் ஈடுபட்டார்களா? அல்லது மர்ம நபர்கள் வேண்டும் என்றே இதை செய்தார்களா? என பல்லடம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .