தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட அதிமுகவினர் இணைய உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில் அதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் காலக்கெடு விதித்தார். இதனால் செங்கோட்டையன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்த நிலையில் பின்னர் அவரை கட்சியிலிருந்து நீக்கினார்.
இந்த நிலையில் தற்போது செங்கோட்டையன் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாகவும் அவருடன் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட அதிமுகவினரும் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முக்கிய புள்ளிகள் பலரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
