புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1996-ஆம் ஆண்டில் இருந்து 2001-ஆம் ஆண்டு வரை இரண்டு முறை அதிமுக எம்எல்ஏவாக நடராஜன் இருந்துள்ளார்.