வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை ஆபத்தை எதிர்கொள்ள உள்ள நூறு மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 36-வது இடத்தில் உள்ளது. 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவ நிலையில் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சர்வதேச ஆய்வில் பருவநிலை ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கிராஸ் டிபண்டன்சி இனிஷியேடிவ் அமைப்பால் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளம், காட்டு தீ, கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட தீவிர வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. 2600-க்கும் மேற்பட்ட பிராமியங்களை கொண்ட இந்த பட்டியலில் இந்திய மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன. 2050 ஆம் ஆண்டு அளவில் காலநிலை ஆபத்தை எதிர்கொள்ளும் முதல் 100 மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம், அசாம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, குஜராத், கேரளா போன்ற மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன.