தமிழக அரசியலில் “யாரும் எதிர்பார்க்காத” மெகா திருப்பங்கள் நிமிடத்திற்கு நிமிடம் அரங்கேறி வருகின்றன. தவெக தலைவர் விஜய் மெஜாரிட்டியை நிரூபிக்கத் திணறி வரும் சூழலில், “அதிமுகவின் முடிவே எங்க முடிவு” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒற்றை வரியில் ஓகே சொல்லியிருப்பது கோட்டை வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக, மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ், புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் அதே சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளது ஒட்டுமொத்த அரசியலையும் பரபரப்பாக்கியுள்ளது. ஒருபுறம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுக்காக விஜய் காத்திருக்க, மறுபுறம் பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் ரகசியமாகக் கைக்கோர்த்து “அதிமுக ஆட்சி” அமைக்கப் போவதாக வெளியாகும் தகவல், தமிழக அரசியலில் ஒரு மாபெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
பிரிந்த திராவிடக் கிளைகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று சேர்கிறதா? அல்லது இது விஜய்க்கு வைக்கப்பட்ட ‘மெகா’ செக்மேட்டா? எனத் தெரியாமல் தமிழகமே இப்போது ‘திக் திக்’ நிமிடங்களில் உறைந்து போயுள்ளது.
