தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறி ஒருபுறம் இருக்க, “குதிரை பேரம்” குறித்த அச்சம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இது குறித்து ஆளுநர் அர்லேகரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “குதிரை பேரம் என்பது மிகவும் மோசமான விஷயம்; அதைப்பற்றி எனக்கும் மிகுந்த கவலை இருக்கிறது, அதனால்தான் இந்த நடைமுறைகளை விரைந்து முடிக்க விரும்புகிறேன்” என அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
அதேசமயம், தவெக தரப்பைக் குறிவைத்து பேசிய அவர், “ஆட்சியை விரைந்து அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லாத ஒருவரை நான் எப்படி அழைத்து ஆட்சி அமைக்கச் சொல்ல முடியும்?” எனப் பளீச்செனக் கேட்டு விஜய்க்குப் பெரிய முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
ஆளுநரின் இந்தப் பேச்சு, மெஜாரிட்டி இல்லாத நிலையில் தவெக-வின் முதல்வர் கனவுக்கு செக் வைப்பது போலவும், விசிக – கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கிடைக்காவிட்டால் நிலைமை விபரீதமாகும் என்பதையும் சூசகமாக உணர்த்தியுள்ளது.
