தமிழக அரசியலில் மெஜாரிட்டி யுத்தம் உச்சகட்டத்தை எட்டி, “அடுத்த முதல்வர் யார்?” என்கிற இழுபறி நீடித்து வரும் நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பாணியில் ஒரு வெடி விபரீத வீடியோவை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

“நாட்டுல அநியாயம் பண்ணிட்டு இருக்காங்க, எந்த வேலையும் உருப்படியா நடக்கல; இதுக்கு மேலயும் காலம் கடத்தாம, ஆளுநர் உடனே விஜய்யைக் கூப்பிட்டு முதலமைச்சர் நாற்காலியில உட்கார வைக்கணும்” என அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தளபதி விஜய்க்கு மெஜாரிட்டி நிரூபிப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், மன்சூர் அலிகானின் இந்த பகிரங்க ஆதரவு தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்பவுமே அதிரடிக்குப் பெயர் போன மன்சூர், இப்போதும் வழக்கம்போல “திராவிடக் கட்சிகள் என்ன செஞ்சாலும் சரி, மக்களுக்கு இப்போ விஜய் தான் வேணும்” என ஓப்பனாகவே சவால் விட்டுள்ளது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

“>