மத்திய அரசு சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் தாக்களின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்திற்கு என சில அறிவிப்புகள் வெளிவந்தாலும் போதிய நிதியை ஒதுக்கவில்லை எனவும் கல்வி நிதியை இதுவரை விடுவிக்கவில்லை எனவும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள முட்டை போஸ்டர் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில் அதிமுக, பாஜக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி முட்டை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.