திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட திமுக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரசியலில் அதிமுக தங்களுக்கு நேர் எதிரியாக இருந்தாலும், அந்தக் கட்சியின் தொண்டர்கள் மீது உண்மையாகவே பரிதாபப்படுவதாக அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
அதிமுகவை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருவதாகவும், ஒட்டுமொத்த அதிமுகவையும் அழிக்கும் வேலையை பாஜக செய்து வருவதாகவும் அவர் கு
ற்றம் சாட்டினார். தொண்டர்களின் உணர்வுகளுக்கு மாறாக, எடப்பாடி பழனிசாமி அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டதாகச் சீறிய ஸ்டாலின், அதிமுகவின் இந்த நிலை கண்டு தான் வருத்தப்படுவதாகத் தெரிவித்தார். முதல்வரின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
