தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக தனது கூட்டணியை உறுதிப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இன்று தென்னிந்திய தொழிலாளர் மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஏ.கே.மூர்த்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தங்களது கட்சி வரும் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவை வழங்கும் என ஏ.கே.மூர்த்தி உறுதி அளித்தார். அவருக்கு சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்ற எடப்பாடியார், கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். தேர்தல் நெருக்கத்தில் அதிமுக பக்கம் கூடுதல் கட்சிகள் வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
