தமிழக அரசியலில் அதிமுக கூட்டணியை சுற்றி பரபரப்பான சூழல் நிலவிக்கொண்டிருக்கும் நிலையில், பாஜக முக்கிய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவின் பேரில், தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், NDA கூட்டணியின் நிலை மற்றும் உள்கட்சி பூசல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை டெல்லிக்கு அழைத்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் ஒருங்கிணைப்பு தேவையில்லை என திட்டவட்டமாக ‘நோ’ சொல்லிவருவது, பாஜகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், EPS-ஐ சமாதானப்படுத்தும் நோக்கில், பாஜக ஒரு பக்கம் தீவிரமாக பேசும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் எதிர்கால தேர்தல் அமைப்புக்கான கூட்டணி கட்டமைப்பை உறுதி செய்யும் வகையில், பாஜக தலைமையகத்தில் தீவிர கலந்தாய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் முடிவுகள், அதிமுக – பாஜக இடையேயான உறவில் புதிய திருப்பங்களை உருவாக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
