சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 81920 ரூபாய்க்கும், ஒரு கிராம் 10240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 11170 ரூபாய்க்கும், ஒரு சவரன் 89360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 142 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 142000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
