மதுரை திருமங்கலம் அருகே வரும் மார்ச் 7-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று அனைவரையும் கட்சியில் இணைத்துக்கொள்கிறார்.
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் திமுகவில் இணையும் சூழல் நிலவுவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலினின் சிறந்த ஆட்சித் திறன் மற்றும் அவரது தலைமையைப் பாராட்டியே தாங்கள் மனப்பூர்வமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
