தமிழகத்தில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அக்கட்சியின் முக்கிய அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் கோவையில் பரபரப்பு அப்டேட் ஒன்றை உடைத்துள்ளார். த.வெ.க அமைச்சரவை என்பது படிப்படியாக மட்டுமே விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்த அவர், கடந்த காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முதன்முதலில் CM ஆனபோது கூட, ஆரம்பத்தில் வெறும் 7 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றார்கள் என்ற வரலாற்றுப் பின்னணியைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

​மேலும், புதிய அரசிற்கு வரும் அரசியல் நெருக்கடிகளைச் மிக லாவகமாகச் சமாளிக்கிற அசாத்திய திறமை முதலமைச்சர் விஜய்க்கு இருக்கிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டியுள்ளார். இதற்கிடையே, த.வெ.க அமைச்சரவையில் அதிமுகவினர் எத்தனை பேர் இடம்பெறுவார்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட நறுக் கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன் நேரடியாகப் பதிலளிக்காமல் மழுப்பலாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியது இப்போ அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சஸ்பென்ஸையும், அடுத்தகட்ட விவாதத்தையும் கிளப்பியுள்ளது.