தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இணைவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழ்நாடு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இதில் இளங்கலை படிக்க விண்ணப்பங்களை ஜூன் 15ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூன் 19ஆம் தேதிக்குள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்.