மும்பை மாநகராட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், மும்பை ஒரு சர்வதேச நகரம் என்று பேசியது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே போன்ற தலைவர்கள், அண்ணாமலையின் பேச்சைத் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்ததோடு, அவரைத் தரகர் என்றும் ஒருமையில் சாடினர். குறிப்பாக, ராஜ் தாக்கரே அண்ணாமலையை ‘ரசமலாய்’ என்று கிண்டல் செய்து சர்ச்சையைக் கிளப்பினார்.

​இருப்பினும், இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் அண்ணாமலை பிரசாரம் செய்த வார்டு 19, 35 மற்றும் 47 ஆகிய மூன்றிலும் பாஜக வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளதன் மூலம், கடந்த 28 ஆண்டுகளாக சிவசேனா வசம் இருந்த மேயர் பதவி பறிபோயுள்ளது. அண்ணாமலையை ஒருமையிலும் தரக்குறைவாகவும் விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு, அவர் பிரசாரம் செய்த வார்டுகளில் கிடைத்த இந்த வெற்றி ஒரு வலுவான பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.