தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிடும் நிலையில், இன்று வெளியான வேட்பாளர் பட்டியலில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இல்லாதது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், அண்ணாமலை ஒரு அர்ப்பணிப்பு மிக்க செயல்வீரர் என்றும், அவர் ஒரே ஒரு தொகுதிக்குள் மட்டும் முடங்கிவிடாமல் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று தேர்தல் பணியாற்ற விரும்புவதால்தான் இந்தப் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், பல ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்த அனுபவம் வாய்ந்த தொண்டர்களுக்கே இந்தத் தேர்தலில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர்களின் விருப்பப்படியே தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

விரைவில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்றும், தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக பாஜக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் பியூஸ் கோயல் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.