தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சுவாரசியமான அதே சமயம் தர்மசங்கடமான சம்பவம் நிகழ்ந்தது.

வீதி வீதியாகச் சென்று வாக்குக் கேட்ட அவர், ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துக் கொண்டே பேசுகையில், எதிர்பாராதவிதமாக வாய் தவறி “விசிகவுக்கு வாக்குச் செலுத்துங்கள்” எனக் கூறிவிட்டார்.

இவர் தவெக-வில் இணைவதற்கு முன்பாக விசிக-வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய பழக்கத்தில் அவர் இவ்வாறு மாற்றிப் பேசிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது தவெக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.