தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் (TSPL) போட்டியில் தற்போது ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள இருக்கிறார்கள். அதாவது ரசிகர்களுக்கு புது விருந்தாக டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டியை நடத்த இருக்கின்றனர். இது அந்த போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாகவும், ஒரு அரிய வாய்ப்பாகவும் இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியை ஸ்ட்ரீட் கிரிக்கெட் டெவலப்மெண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா ஏற்பாடு செய்துள்ள நிலையில் நாளை திருச்சியில் உள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் காலேஜில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அதன்படி எம் எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் பரசுராமன், Bcci NCA லெவல் பி பயிற்சியாளர் மற்றும் velammal knowledge park கிரிக்கெட் வழிகாட்டி திரு. சதீஷ் சதகோபன், NCA லெவல் ஏ பயிற்சியாளர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட DMK விளையாட்டு அணி தலைவர் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டி 32 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில் தேர்வாகும் முதல் நான்கு அணிகள் செமி ஃபைனல் சுற்றுக்கு முன்னேறும். இதைத்தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி அன்று இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இந்த போட்டியில் 8 அணிகள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் ஒவ்வொரு அணியிலும் 15 பேர் கலந்து கொள்வார்கள். மேலும் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டி என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்பதால் இந்த போட்டி மிகவும் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது
