டைரக்டர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் “தங்கலான்”. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் கர்நாடக மாநிலத்திலுள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் நடிக்கின்றனர்.

தங்கலான் திரைப்படத்தின் சூட்டிங் கடந்த வருடம் துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. அண்மையில் இப்படத்தின் ஒத்திகையின்போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது. இதனால் அவர் சிறிதுகாலம் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இப்போது தங்கலான் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்காக நடிகர் விக்ரமிற்கு மேக்கப் போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பெரிய முடி மற்றும் தாடியுடன் விக்ரம் ஆளே அடையாளம் தெரியாதபடி இருக்கிறார்.