உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த  படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த தனுஷ் உள்ளிட்ட பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்ற்னார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி உள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. வடிவேலு பாடலுடன்வெளியாகிய இந்த வீடியோ ரசிகர்களை உருகவைத்துள்ளது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.