ராஜமௌலி டைரக்டில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் வாயிலாக பான் இந்திய நடிகராக மாறியவர்தான் பிரபாஸ். அண்மையில் இவரது நடிப்பில் வெளியாகிய ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். இதனையடுத்து நாக் அஸ்வின் இயக்கும் ப்ராஜெக்ட்-K திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் பிரபாஸ்.

ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாராகக்கூடிய இப்படத்தில் வில்லனாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ப்ராஜெக்ட்-K திரைப்படத்திற்காக பிரபாஸ் எவ்வளவு ருபாய் சம்பளமாக வாங்கினார் என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, அவர் ரூ.150 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.