இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. குறிப்பாக குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவில்லை. சாலையில் நடந்து செல்பவர்களின் பொருட்களை பிடுங்குவது, தோளில் ஏறி அமர்ந்து கொள்வது மற்றும் முடியை பிடித்து இழுப்பது என பல வழிகளில் மக்களை தொந்தரவு செய்கின்றன.

பல கோவில்களில் குரங்குகளிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் சற்று வித்தியாசமான குரங்கு ஒன்று பலரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது தண்ணீரில் நீந்தும் குரங்குகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. தண்ணீரில் ஒன்றல்ல இரண்டல்ல பல குரங்குகள் காணப்படுகின்றது. இந்த குரங்குகள் அனைத்தும் மிகவும் மகிழ்ந்து செல்வதை வீடியோவில் காண முடிகின்றது. குரங்குகளின் இந்த வியக்க வைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

ViralHog இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@viralhog)