சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 22 ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3360 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 1,00,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 13,745 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் என்று கிராமுக்கு 53 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 253 ரூபாய் க்கும் ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
