தவெக தலைவருக்காக மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தைப் பார்க்கும்போது, உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அது அமைந்திருந்தது. மலேசியாவில் இதற்கு முன்பு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் மட்டுமே ரோட் ஷோ நடத்தியுள்ளனர். அந்த வகையில், இந்த முறை விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் தமிழகத்தின் வரலாற்று நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவரது தலைமை வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்கள், இளைஞர்கள் என 18 முதல் 35 வயதுக்குட்பட்டோர் ஒருமனதாக குரல் கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது. இது 1972-ஆம் ஆண்டு புரட்சித் தலைவருக்கு உருவான எழுச்சியைப் போலவும், 1988-ஆம் ஆண்டு அம்மா ஜெயலலிதா கண்ட மாற்றத்தைப் போலவும் ஒரு புதிய மாற்றமாக உள்ளது. மக்கள் சக்தியோடு இணைந்து அவர் தமிழகத்தின் முதலமைச்சராக அமர்வார். ஒரு புதிய இயக்கம் தொடங்கியிருக்கிறது.
கூட்டணியில் எப்போது மற்றவர்கள் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஜனவரி முதல் வாரத்திற்குள் அனைத்தும் தெரியவரும் என்றார்.
இதனைத் தொடர்ந்து, “தவெக ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த குழந்தை” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன்,
“இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்த சீமான், அங்கு விருந்து சாப்பிட்டுவிட்டு பரிசு வாங்கி வந்த காலமும் இருக்கிறது” என்று கூறினார்.
திருமாவளவன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, செங்கோட்டையன் தவறுதலாக சீமானை விமர்சித்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
