உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் உள்ள நவாடா சாலை பகுதியில் உள்ள ஒருவர் பசுவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்ற தகவல் பரவியதுடன் அதற்கான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் ராம் பகதூர் மீது கடும் கண்டனம் எழுந்தது. மக்கள் மத்தியில் பரவலான கோபம் உருவாக, அவரை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், ராம் பகதூரை தேடி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த தேடலில், டெல்லி சாலையில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட நபர் போலீசை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர், போலீசாரும் பதிலடி கொடுத்ததுடன் நடந்த என்கவுண்டரில் ராம் பகதூர் காலில் காயமடைந்தார். அவரை போலீசார் கைது செய்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட ராம் பகதூரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. சஹரன்பூர் போலிசார் இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
