குஜராத் மாநில அகமதாபாத் பகுதியில் லால் தர்வாசா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு செயல்பட்டு வரும் லக்கி ஹோட்டல் மிகவும் பிரபலமாக இருப்பதோடு இந்து மற்றும் முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளச் சின்னமாகவும் கருதப்படுகிறது. அதாவது இந்த ஹோட்டல் 26 கல்லறைகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலில் சாப்பிடும் டேபிள் மற்றும் சேர் அருகே கல்லறைகள் இருக்கும். தினசரி ஹோட்டல் ஊழியர்கள் கல்லறைகளுக்கு மலர் தூவி பதேஹா ஓதுவார்கள். இந்த ஹோட்டலில் சாப்பிட்டால் அதிர்ஷ்டம் என்று நம்பப்படுவதால் தினசரி மக்கள் அதிக அளவில் வருவதோடு குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
இந்த ஹோட்டலில் பிரபல ஓவியர் எம்எப் ஹூசைன் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் டீ குடித்துள்ளனர். இந்த உணவகம் ஒரு கல்லறையில் கட்டப்பட்டுள்ளது என அந்த உணவகத்தில் கிட்டத்தட்ட பதில் வருடங்களாக பணியாற்றி வரும் ரசாக் மன்சூரி என்ற காசாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஹோட்டல் கடந்த 1950ஆம் ஆண்டு முகமது பாய் என்பவரால் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்தாகும்.
