மும்பையின் ஜோகேஷ்வரி பகுதியில் நடந்த ஒரு அருவருப்பான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்ட காரின் பின்னால், ஒரு நபர் பெண் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இந்த செயலை பார்த்த ஒரு தன்னார்வலர் உடனே தலையிட்டு நாயை காப்பாற்றியதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் @dushyantvyas தனது பக்கத்தில் @streetdogsofbombay பக்கத்துடன் இணைந்து பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, “நள்ளிரவில் நடைபயிற்சிக்குச் சென்றபோது சந்தேகத்திற்கிடமான தோற்றம் கொண்ட நபர் ஒரு நாயை தவறாக கையாள முயன்றதை கண்டேன். உடனே வீடியோ எடுத்து அந்த நபரை எதிர்த்தேன். நாயும் எனது அருகே வந்துவிட்டது.” என தெரிவித்தார். ஆனால் அதற்குப் பிறகு அந்த நபருக்கு எதிராக புகார் அளிக்க முயற்சி செய்தபோது, போலீசார் “இது எங்கள் நிர்வாக அதிகாரத்தின் கீழ் வராது” என கூறி நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளனர்.

இந்த சம்பவம் நாய்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது. புதிய பாரதீய ந்யாய சனிதா சட்டம் 2023 (BNS) பசுக்களை அல்லது விலங்குகளை காயப்படுத்துதல், கொல்வதற்கு எதிரான கடுமையான தண்டனை விதிக்கிறது. புதிய சட்டத்தின் படி, BNS பிரிவு 325-ன் கீழ் இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம். ஆனால், இந்த வழக்கில் போலீசார் தங்களது பொறுப்பை தவிர்க்கும் நிலைமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பெருமளவில் மக்கள் இந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என கோரி வருகின்றனர். மேலும் இதோ அந்த வீடியோ,