பீகார் மாநிலத்தில் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். அந்தத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையமும் வீடு வீடாக சென்று வாக்காளர் சரி பார்ப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் இறுதி முடிவு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் கூறி இருந்த நிலையில், தற்போது பட்டியலை இறுதி செய்வதற்கான பணியில் ஈடுபட்டபோது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் பகுதியில் வசித்து வந்த மக்கள் பீகாரில் ஆதார் அட்டை, குடியுரிமை சான்றிதழ்களை வாங்கி வைத்துள்ளனர்.
அவர்கள் மேலும் சட்ட விரோத வழியில் தங்களுடைய பெயர்களை ரேஷன் கார்டுகளில் சேர்த்து ரேஷன் கார்டுகளும் வாங்கி வைத்துள்ளனர்.
தற்போது பீகாரில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கின் விசாரணையில் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் சட்டவிரோத முறையில் செயல்பட்டவர்களின் அனைவரது பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
