இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, அயர்லாந்து பந்துவீச்சாளர் ஜெய் முந்த்ரா ஆரம்பத்திலேயே பெரும் அதிர்ச்சியளித்தார்.
அவர் தனது துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரையும் ‘கோல்டன் டக்’ முறையில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணியின் டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்தார்.
தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய ஜெய் முந்த்ரா, அடுத்த ஓவரிலேயே இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரையும் விக்கெட் வீழ்த்தி அயர்லாந்து அணியின் கையை ஓங்கச் செய்தார். ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளதால், இந்திய அணி இந்த போட்டியில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
Jai strikes first ball… again!! 😮#BackingGreen | #IREvIND | #FailteSolar pic.twitter.com/PzkGrT6aXH
— Cricket Ireland (@cricketireland) June 28, 2026
“>
இந்த அதிரடி பந்துவீச்சு அயர்லாந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள அதே வேளையில், இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
