உத்தரப்பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், 32 வயதான பெண் ஒருவர் மது போதையின் உச்சத்துக்கே சென்று நடுரோட்டில் படுத்துக்கொண்டு செய்த அலும்பல் வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. போதை தலைக்கேறிய நிலையில் அந்தப் பெண், சாலையின் நடுவே அமர்ந்தும் படுத்துக்கொண்டும் வாகனங்களைச் செல்ல விடாமல் ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

​பொதுமக்களுக்குக் கடுமையான இடையூறு ஏற்படுத்திய அந்தப் பெண்ணைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் திணறிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது மற்றும் போதையில் நடுரோட்டில் ரகளை செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அந்தப் பெண் மீது போலீசார் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.