நாட்டின் பெரும்பாலான மக்கள் தங்கள் பிழைப்பிற்காக சொந்த ஊர்களை விட்டு வேறோர் மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு வேலைக்காக செல்வது ஒரு இயல்பான நிலையாக உள்ளது.

வருடத்தில் ஒருமுறை அல்லது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை பண்டிகைகள், சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு மட்டுமே சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறார்கள். குறிப்பாக சமீபத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளியூரில் பணியாற்றும் பலர் முன்பதிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், ரெயிலில் கழிப்பறையை ஒரு நபர் தனது தனிப்பட்ட படுக்கையறையாக மாற்றி பயன்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ‘விஷால்’ என்ற பயனர் பதிவு செய்த வீடியோவில், அந்த நபர் கழிப்பறையை அறைபோல் அலங்கரித்து சுமூகமாக பயணம் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by VishaL (@mr.vishal_sharma_)

“>

விஷால் அவரிடம் நேரில் சென்று விசாரணை நடத்தியபோது, பயணி அலட்சியமாக “ஆம்” என பதிலளிப்பதும், அந்த அறையில் வைத்திருந்த அவரது சொந்தப் பொருட்கள் காணப்படுவதும் நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோ, இந்திய ரெயில்களின் வசதிக் குறைபாடு, இடப்பற்றாக்குறை மற்றும் பொது சொத்துக்களை மதிக்காத பயணிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது