கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி ரிப்பன் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுமி பயணம் செய்த ஆட்டோவில் இருந்து திடீரென கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் பெரிய காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளார். சம்பவம் இடம்பெற்ற காட்சி அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த காட்சியில், ஆட்டோ சாலையில் பயணிக்கும் போது, கதவு திறந்த நிலையில் இருந்ததால் சிறுமி சறுக்கி விழுவதும், பின்னர் அருகிலிருந்தோர் விரைந்து சென்று அவரை காப்பாற்றுவதும் காணப்படுகிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“>