தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகர் ஷாம் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடிக்க நடிகர் ஷாம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஒரு கோடி ரூபாய் வரை நடிகர் ஷாம் சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும் வாரிசு திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.