தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார். இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் சொத்துப் பட்டியல் என்று ஒரு தகவல் செய்திகளில் உலா வருகிறது. அதன்படி நயன்தாரா ஒரு படத்தில் நடிப்பதற்கு 5 கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் அவருடைய மொத்த சொத்தின் தற்போதைய மதிப்பு 200 கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் மனசினக்கரே படத்தின் மூலம் நடிக்க வந்த நயன்தாரா, இதுவரை 80க்கும் மேற்பட்டபடங்களில் நடித்திருக்கிறார்.