அனைத்து மருந்துக்கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் M.S. சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள அனைத்து கடைகளிலும் அடுத்த 30 நாட்களுக்குள் கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அப்படி சிசிடிவி பொருத்தாவிட்டால் கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மெடிக்கல் ஷாப்களில் போதை மாத்திரைகள் சட்டப்புறம்பாக விற்கப்படுகிறது என்ற புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.