2023-24 ஆம் நடப்பு கல்வி ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 13-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க இருக்கிறது .தேர்வுக்கான அட்டவணையானது பள்ளி கல்வித்துறை மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அரையாண்டு தேர்வு பணி குறித்து ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை  சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார். அதன்படி அந்த அறிக்கையில், தேர்வு அட்டவணையை மாணவர்களுக்கு அறிவித்து பள்ளியில் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.

தேர்வு எண் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அதை கரும்பலகையில் ஒதுக்கப்பட்டுள்ள வகுப்பு வாரியாக மாணவர்கள் விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்த வேண்டும். 6 முதல் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு அனைத்து வகையான ஆசிரியர்களும் தேர்வுக்கான பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கீட்டை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். பொது தேர்வை போல அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மணி அடித்து அதனுடைய விபரத்தை தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் விடைத்தாளின் முதல் பக்கத்தை காலியாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். பொதுத்தேர்வு போல முதல் பக்கத்தில் ஆசிரியர்கள் பக்கவாரியான மதிப்பெண்களையும் குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.