கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. நேற்று (பிப். 6) காலை தங்கம் விலை சவரனுக்கு ₹1,600 குறைந்த நிலையில், நேற்று மாலை மற்றும் இன்று காலை என அடுத்தடுத்து விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,360 உயர்ந்து, ஒரு சவரன் ₹1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ₹170 உயர்ந்து ₹14,420-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது; ஒரு கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹285-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹5,000 உயர்ந்து ₹2,85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது நடுத்தர வர்க்கத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.