உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டி இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. மேலும் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த தாக்குதலில் 15 வயது சிறுமி உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 40-கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இதில்  அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளது. அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ கூறியதாவது, நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 அதிகரித்துள்ளது. மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், 35 பேரை தேடி வருகிறோம் கூறியுள்ளனர்.