பாகிஸ்தானின் அப்துல் ரகுமான் மக்கியை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. 2013 நவம்பர் 26 இல் நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாத அமைப்பு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டுவது, இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி அவர்களை மூளை சலவை செய்து தாக்குதலுக்கு தயாராக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்.

லஷ்கர் இதொய்வா பயங்கரவாத அமைப்புக்கு தேவையான அனைத்து நிதி ஆதாரங்களையும் திரட்டுவதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். இதனால் 2020 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புக் குழு அப்துல் ரகுமான் மக்கியை குற்றவாளி என அறிவித்து சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் அப்துல் ரகுமான் மக்கியை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.