நேபாளம் தலைநகரான காத்மண்டூவிலிருந்து, பொகாரா நகருக்கு கிளம்பிய விமானமானது கடந்த 15-ம் தேதி தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 68 பயணிகள், 4 விமான பணியாளர்கள் பயணம் மேற்கொண்டனர். அத்துடன் 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், தென் கொரியாவை சேர்ந்த 2 பேர், ஆஸ்திரேலியா, அர்ஜென்டீனா, பிரான்ஸ், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 15 வெளிநாட்டினர் அந்த நேபாள விமானத்தில் பயணித்து உள்ளனர்.

இவ்விபத்தில் 68 பேரின் உடல்கள் கிடைத்த நிலையில், யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை. இந்த விபத்துக்குள்ளான விமானத்தின் கோ பைலட் அஞ்சு கதிவாடா பற்றி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, அஞ்சுவின் கணவரும் விமானி தான். அவரின் கணவர் கடந்த 2006ம் வருடம் இதே போன்ற விமான விபத்தில் தான் இறந்தார் என தெரியவந்தது. சென்ற 2006ம் வருடம் இதே எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஜூம்லா நகரில் விபத்துக்குள்ளானது.

அப்போது அந்த விமானத்தின் விமானியான தீபக் பொக்ரேல் இறந்தார். இவரின் மனைவி தான் அஞ்சு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அஞ்சு, கணவர் இறந்த பின், காப்பீடு வாயிலாக கிடைத்த தொகையினை வைத்து விமானிக்கு பயின்றார். கடந்த 2010ம் வருடம் முதல் விமானியாக பணிபுரிந்த அஞ்சு இதுவரையிலும் 6 ஆயிரத்து 400 மணிநேரங்கள் விமானத்தை வானில் இயக்கி உள்ளார். இந்நிலையில் தனது கணவரை போன்று அஞ்சும் ஓட்டிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி இறந்துள்ளார். கணவன்- மனைவி இருவரும் விமானியாக இருந்து விமான விபத்துகளில் சிக்கியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது