ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் அமைச்சர் முர்ஷல்நபிஷாதா சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு காபூல் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட முர்ஷல்நபிஷாதா அமைச்சராகவும் இருந்தார்.
அவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் முன்னாள் எம்பி முர்ஷல்நபிஷாதா மற்றும் அவருடன் இருந்த பாதுகாவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் அவரது சகோதரர் மற்றும் மற்றொரு பாதுகாவலர் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.