பிளிப்கார்டு, வாடிக்கையாளர்கள் அதிகளவு பணத்தை சேமிப்பதற்குரிய வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக பிளிப்கார்டு சில ஸ்மார்ட் போன்களில் அளிக்கும் பெரிய சலுகைகள் பயனாளர்கள் எதிர்பாராத அளவிற்கு அதிரடியாக இருக்கிறது. நீங்களும் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்து, உங்களது பட்ஜெட் குறைவாக இருந்தால் இப்பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

ரெட்மி 10

இந்த ஸ்மார்ட் போனின் உண்மை விலையானது ரூ.14,000 ஆகும். இருப்பினும் வாடிக்கையாளர்கள் இப்போனை மிக கம்மியான விலையில் வாங்க முடியும். பிளிப்கார்டு ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனில் 33 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இதனால் நீங்கள் ரூபாய்.9999-க்கு இந்த போனை வாங்கலாம். அதோடு தள்ளுபடிகள் முடிவடையவில்லை. இந்த ஸ்மார்ட்போனில் மேலும் ரூ.9,400-க்கான தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக ரெட்மியின் இந்த அசத்தலான போனை வாடிக்கையாளர்கள் ரூ.599-க்கு வாங்க முடியும்.