உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது பர்சனல் சாட்களை பாதுகாப்பாக வைத்திருக்க இது நாள் வரை ஆப் லாக் மட்டுமே கை கொடுத்து வந்தது.

ஆனால் இனி அந்த பயமே கிடையாது. தனிப்பட்ட சாட்களை பயனர்கள் லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும். இந்த சாட்டிற்கு வரும் ஆடியோ மற்றும் வீடியோ போன்ற செய்திகளை குறிப்பிட்ட பயனரை தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. இந்த அப்டேட் விரைவில் அறிமுகமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.