இப்போது உலகம் முழுவதும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் மிக குறைந்த அளவிலான சிறப்பு வசதிகளை மட்டுமே கொண்டு செயல்பட்டு வந்த வாட்ஸ்அப், நாளடைவில் அதிகளவிலான சிறப்பு வசதிகளையும் அதிநவீன பலன்களையும் அளித்து வருகிறது.

அந்த அடிப்படையில் தங்களது பர்சனல் சாட்களை பாதுகாப்பாக வைத்திருக்க இதுநாள் வரையிலும் ஆப் லாக் மட்டுமே கைகொடுத்து வந்தது. இனி அந்த பயமே தேவையில்லை. ஏனெனில் தனிப்பட்ட சாட்களை பயனர்கள் லாக் செய்து வைத்துக்கொள்ளலாம். அந்த சாட்டிற்கு வரக்கூடிய ஆடியோ மற்றும் வீடியோ போன்ற செய்திகளை குறிப்பிட்ட பயனாளரை தவிர்த்து வேறு யாரும் பார்க்க முடியாது. இந்த புது அப்டேட் விரைவில் அறிமுகமாக இருப்பதாக மெட்டா நிறுவனமானது அறிவித்து உள்ளது.