நம் நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் காஞ்சிபுர மக்கள் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், சிலிண்டரில் நிரப்பக்கூடிய சமையல் எரிவாயுவானது நம் நாட்டில் கிடைக்காது. ஆகவே அதை வெளியிலிருந்து தான் இறக்குமதி செய்கிறோம். இதன் காரணமாக அரசு பாதிக்கு பாதி விலை (ரூ.600/) கொடுத்து விட்டு மக்களுக்கு மானியமாக வழங்கதான் நினைக்கிறது. எனினும் இதர நலத்திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இதற்கான நிதி போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.