சென்ற 2017-ஆம் வருடம் முதல் நாட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலில் இருக்கிறது. மக்கள் செலுத்திவரும் பல வரிகளும் மாற்றியமைக்கப்பட்டு ஒரே ஜிஎஸ்டி வரியாக வசூல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் வசமிருந்த வரி வசூல் முறையானது மத்திய அரசின் வசம் மாறி உள்ளது. மற்ற வரி இழப்பீடுகளை மாநில அரசுகள் ஈடுசெய்யும் அடிப்படையில் வருடந்தோறும் மாநில வாரியாக மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ஒதுக்கி வருகிறது. இந்த நிலையில் சென்ற 2022-23 ஆம் நிதியாண்டின் வரி வசூல் தொடர்ப்பன அதிகாரபூர்வமான அறிக்கையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

அந்த வகையில் மார்ச் மாதம் மிகவும் அதிகப்படியான இதுவரை பதிவான வரி வசூல் கணக்கீடுகளில் 2-ஆம் இடத்தை பிடித்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி மார்ச் மாதம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது. கடந்த 2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 15 சதவீதம் அதிகம் ஆகும். இந்த மார்ச் மாதத்தில் 29 ஆயிரத்து 546 கோடி ரூபாய் மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூலாகவும், 37 ஆயிரத்து 314 கோடி ரூபாய் மாநில அரசின் GST வசூலாகவும், 82 ஆயிரத்து 907 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த GST வசூலாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.