நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது. குறிப்பாக சிலிண்டர்,விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதனால் இல்லத்தரசிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பாஜகவினரை சந்திக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வருகை தந்தார்.

அப்போது, அவரை சூழ்ந்துகொண்ட கிராம மக்கள் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாததால், சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்றும், கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை’ எனவும் கூறினார்.