கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசிப்பவர் ஜெய்கணேஷ். இவரது மனைவி சரஸ்வதி (21).  இந்த தம்பதிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப முறைப்படி இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது.  திருமணமான பின்பிம் சரஸ்வதி கல்லூரி பயின்று வந்தார். இந்த நிலையில் திருமணமான 3 மாதமே ஆன நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காடாம்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.