கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி என்ற கிராமத்தை மணிகண்டன் தன்னுடைய மகள் தமிழ்செல்வி (15), தனது அண்ணன் மகள் புவனா (13) ஆகியோருடன் நீச்சல் கற்றுக் கொடுக்க நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு தமிழ்ச்செல்வியும் புவனாவும் சென்று தத்தளித்தனர்.

அவர்களை காப்பாற்ற சென்ற மணிகண்டன் சேற்றில் மாட்டி அவர்களுடன் சேர்ந்து நீரில் மூழ்கியதால் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பிறகு மணிகண்டனின் மனைவி அளித்த தகவலின் பேரில் அவர்களுடைய உடலை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.